தளபதி-62 இவருக்காக உருவாக்கப்பட்ட கதையா? - லீக்கான அதிர்ச்சி தகவல்.!

June 13, 2018


தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 என்ற படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் வரும் தீபாவளிக்கு பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.


thalapathy
இந்நிலையில் தற்போது தளபதி-62 படத்தை பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்துள்ளது. ஆம் ஏ.ஆர்.முருகதாஸ் முதலில் இந்த கதையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக தான் உருவாக்கினாராம்.


கபாலி படத்தின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருந்த போது சூப்பர் ஸ்டார் அடுத்த படத்திற்காக பல இயக்குனர்களிடம் கதையை கேட்டுள்ளார். அதில் ஏ.ஆர்.முருகாதாஸ் மற்றும் வெற்றிமாறன் இருவரும் முக்கியமான இயக்குனர்கள்.

வெற்றிமாறன், முருகதாஸ் இருவரின் கதையையும் கேட்ட சூப்பர் ஸ்டார் வெற்றி மாறனின் கதை பேங்க்ல போட்ட டெபாசிட் மாதிரி, எப்போ எடுத்தாலும் ஹிட் தான் என கூறி உள்ளார்.


thalapathy

அதேபோல் முருகதாஸ் சொன்ன கதை அரசியலும் ஆக்ஷன் கலந்த கதையாக இருந்ததால் உடனே முருகதாஸை கட்டி அணைத்து அடுத்த படம் இது தான், நாம சேர்ந்து பண்றோம் என கூறியுள்ளார். ஆனால் சூப்பர் ஸ்டார் கபாலி வெற்றியை அடுத்து மீண்டும் பா.ரஞ்சித்திற்கே வாய்ப்பு கொடுத்ததால் முருகதாஸ் தற்போது தளபதியை வைத்து அந்த கதையை இயக்கி வருகிறாராம்.

மேலும் இந்த தளபதி 62 படத்தின் கதையில் தளபதி விஜய் மிரட்டி தெறிக்க விடுவார் என்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.