அவரெல்லாம் ஒரு ஆளா? தகுதியே இல்லாத மனிதர் - பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய தன்ஷிகா.!

November 14, 2017


தமிழ் சினிமாவில் டி.ஆர் அடுக்கு மொழி வசனங்களால் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தவர், ஆனால் இவர் விழித்திரு படத்தின் நிகழ்ச்சி ஒன்றின் போது தன்ஷிகா பேசும் போது டி.ஆரின் பெயரை கூற மறந்து விட்டார்.


dhanshika
இதனையடுத்து டி.ஆர் தன்ஷிகாவை மிகவும் மோசமாக விமர்சனம் செய்து தன்ஷிகாவை கண் கலங்க வைத்து விட்டார், இதனால் திரையுலகில் பலரும் டி.ஆருக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.


இது குறித்து தன்ஷிகா சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, டி.ஆர் தான் ஒரு ஆன்மீகவாதி என கூறி வருகிறார். ஆனால் எந்தவொரு ஆன்மீகவாதியும் குரலை உயர்த்தி பேச மாட்டார்கள்.


எனக்கும் அதிகமாக கோபம் வரும், அதனால் தான் தினமும் தியானம் செய்து வருகிறேன். அதனால் தான் அன்று கூட என் கோபத்தை அடக்கி கொண்டு அமைதியாகி இருந்தேன் என கூறியுள்ளார்.