பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மா ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், பாடகியாகவும் இருந்து வருகிறார்.என்ஹெச் 10 படம் மூலம் தயாரிப்பாளர் ஆன அனுஷ்கா ஷர்மா அதையடுத்து பில்லௌரி படத்தை தயாரித்து நடித்தார்.

My film does not need superstars - Anushka Sharma interviewed
இந்நிலையில் அவர் ; கான்களை வைத்து படம் தயாரிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை. நான் தயாரித்து வரும் கதைகள் சூப்பர் ஸ்டார்களுக்கு பொருத்தமாக இருக்காது.
என்.ஹெச். 10 மற்றும் பில்லௌரி ஆகிய இரண்டு படங்களுக்குமே சூப்பர் ஸ்டார்கள் தேவையில்லை. எங்களை பொறுத்தவரை அனைத்தும் திரைக்கதையில் இருந்து துவங்குகிறது.
நாளைக்கு எழுதப்படும் திரைக்கதைக்கு பெரிய பட்ஜெட் தேவைப்படலாம். அந்த கதைக்கு கான்கள் அல்லது வேறு ஏதாவது பெரிய நடிகர் தேவை என்றால் நிச்சயம் அவர்களை நடிக்க வைப்போம்.
நடிகருக்காக என்னால் கதை எழுத முடியாது. அதை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன். கதைக்காக தான் நடிகர்கள். முதலில் கதையை எழுதிவிட்டு எந்த நடிகர் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்வோம். மாற்றி செய்தால் படம் ஓடாது என்று தெரிவித்துள்ளார் அனுஷ்கா ஷர்மா.