நான் கத்துவேன், அடி கொடு சர்வாதிகாரியான ஐஸ்வர்யா - பரபரப்பை கிளப்பும் ப்ரோமோக்கள்

August 14, 2018


பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவில் மஹத் மற்றும் டேனியல் இடையே சண்டையிற் ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து தற்போது அடுத்தடுத்த இரண்டு ப்ரோமோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.


bigg boss
இந்த ப்ரோமோவில் ஐஸ்வர்யா மற்றும் வைஷ்ணவி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. டாஸ்கில் ஐஸ்வர்யா வைஷ்ணவியின் கையை கட்டி போட்டுள்ளார். இதனால் ரித்விகா ஐஸ்வர்யா ஒருத்தரை கையை கட்டி போடுறது நல்லா இல்ல என சண்டையிடுகிறார்.


இதனையடுத்து வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் மஹத் சென்றாயனிடம் டேனியல் விளையாடுவதை பார்த்தையா என குறை கூறுகிறார். அதன் பின்னர் ரித்விகா வருவதை பார்த்து விட்டு வைஷ்னவி எதையோ கூற ரித்விகா உனக்கு பேச தகுதியே இல்லை என கூறுகிறார்.