எனக்கு எல்லாமே தளபதி தான் - பிரபல நடிகை ஓபன் டாக்.!

June 23, 2018


தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நேற்று தன்னுடைய 44-வது பிறந்த நாளை கொண்டாடினார். ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து மழையில் அவரை நனைய வைத்தனர்.


thalapathy
பெரும்பாலான திரையுலக பிரபலங்கள் விஜயை பற்றி சிறப்பான விசயங்களை கூறி அவரை வாழ்த்தி வந்தனர், தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷும் தளபதி விஜயை வாழ்த்தி ட்வீட் செய்து இருந்தார்.


அந்த டீவீட்டில் எனக்கு எல்லாமே விஜய் தான். அதாவது நல்ல நண்பன், well wisher என எல்லாமே தளபதி தான் என குறிப்பிட்டு ட்வீட் செய்து இருந்தார். இவரது இந்த டீவீட்டை ரசிகர்கள் பலரும் ரி ட்வீட் செய்து வந்தனர். பைரவா படத்தை அடுத்து சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


thalapathy