மெர்சல் டீசரில் எத்தனை பேர் இதை கவனித்தீர்கள்? - படத்தின் கதையே இது தானா?

September 22, 2017


தளபதி விஜய் தற்போது மெர்சல் படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த படம் தீபாவளி ரீலீஸாக வெளியாக உள்ளது, வித்தியாசமான கதாபாத்திரங்களில் விஜய் நடித்து உள்ளதால் எதிர்பார்ப்பு எக்கசக்கமாகவே உள்ளது.


mersal
இந்நிலையில் நேற்று இந்த படத்தின் டீசர் வெளியாகி வெறும் 4 மணி நேரத்தில் உலகிலேயே அதிக லைக்ஸ் பெற்ற டீசர் என்ற வரலாற்று சாதனையை படைத்தது.


இந்த படம் மன்னர் கால படம் என பலரால் கூறப்பட்டு வந்தது, அதற்கு ஒரு பதிவும் டீசரில் சிக்கி உள்ளது, அப்பாவின் விஜய் வரும் காட்சியில் அவருக்கு பின்னால் எம்ஜிஆர் நடித்த 'உழைக்கும் கரங்கள்' படத்தின் கட்-அவுட் உள்ளது.


இதனால் படத்தின் பிளாஷ்பேக் காட்சி 70-களில் நடந்தது என்பது உறுதியாகி உள்ளது, மேலும் தனது தந்தையை கொன்றவரை பழி வாங்கும் கதை தான் எனவும் கூறப்படுகிறது .

இருந்தாலும் அட்லீயின் வித்தியாசமான விசுவல் காட்சி ரசிகர்களை மெர்சலாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
Latest