தனுஷ் வழக்கில் திடீர் திருப்பம்; அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது!

March 21, 2017

நடிகர் தனுஷின் வளர்ச்சி இன்று நாடறிந்தது. அவரது பர்சனல் வாழ்கையும் சரி திரையுலக வாழ்கையும் சரி எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சீராக போய்க்கொண்டிருக்கிறது. அவரது அண்ணன், மனைவி, மாமனார் என எல்லோருமே சினிமாவில் ஜொலிக்கும் பிரபலங்கள்.

dhanushஅப்படி இருக்கும்போது


கடந்த சில வருடங்களாகவே சிவகங்கையை சேர்ந்த ஒரு தம்பதியினர் தனுஷ் எங்களுடைய மகன் என கூறி வருகிறார்கள். அதுபோக போலீஸாரிடமும் புகார் கொடுத்துள்ளார்கள். இதைதொடர்ந்து நடிகர் தனுஷ், மதுரை நீதிமன்றத்தில் கடந்த மாதம் தனது பெற்றோர்களுடன் ஆஜரானார்.

இந்த வழக்கு தொடர்பான மருத்துவ அறிக்கை நேற்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சமர்பிக்கப்பட்டது. அதில் தனுஷ் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலமாக அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது இவ்வழக்கின் மிகப்பெரிய திருப்பமாக கருதப்படுகிறது.

மேலும் இதுதொடர்பான விரிவான விசாரணை வரும் மார்ச் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.