பிறந்த நாளில் ஏழைகளுக்கு பிரியாணி விருந்து வைத்த ஜி.வி.பிரகாஷ்.!

June 14, 2018


கிரிகேஷ் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ்-அபர்னதி, நந்தன்ராம், பசங்க பாண்டி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்காக ஜி.வி.பிரகாஷ், நந்தன்ராம், பசங்க பாண்டி ஆகியோர் வில்லன்களோடு மோதும் சண்டைக் காட்சி நேற்று செம்மஞ்சேரி அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் படமாக்கப்பட்டது.


g.v prakash
இப்படப்பிடிப்பில் ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாளை வசந்தபாலன், தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், கேமராமேன் கணேஷ் சந்திரா, சண்டை இயக்குனர் அன்பறிவு, ஆர்ட் டைரக்டர் சுரேஷ் குமார், தயாரிப்பு மேலாளர், எஸ்.ஏ.ராஜ்குமார், அபர்னதி, நந்தன்ராம், பாண்டி அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.


படப்பிடிப்பு குழுவினருக்கும், தொழிலாளர்களுக்கும் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. ஏழை தொழிலாளர்கள் 500 பேருக்கும் பிரியாணி விருந்தும், இனிப்பும் வழங்கப்பட்டது.


g.v prakashLatest