"கோலி சோடா - 2" - திரை விமர்சனம்

June 14, 2018


"கோலி சோடா" வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, எஸ்.டி.விஜய் மில்டனின் எழுத்து, ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் சமுத்திரகனி, "சிட்டிசன்" சரவண சுப்பையா, கெளதம் வாசுதேவ் மேனன்(!), ஈ.ராமதாஸ்.. ஆகிய இயக்குன நடிகர்களுடன் ரேகா, ரோகிணி, உள்ளிட்ட நட்சத்திரங்களும் இப்படத் தயாரிப்பாளர் பரத்சீனி, வினோத், இசக்கி பரத். உள்ளிட்ட நிறைய்ய நிறைய்ய புதுமுகங்களும் நடித்து இன்று, வெளி வந்திருக்கும் படம் தான் "கோலி சோடா - 2."

கதைப்படி, நார்த் மெட்ராஸ் எனப்படும் வட சென்னை ஏரியாவில் வெவ்வேறு சூழலில், சாதாரண வாழ்க்கை வாழும் இளைஞர்கள் மூவர், தங்கள் வாழ்க்கையை அடுத்த கட்ட மேல் தட்டிற்கு எடுத்து செல்ல முயற்சிக்கிறர்கள்.. அவர்களது முயற்சிக்கு இந்த சமூகம் சகலவிதத்திலும் போடும் முட்டுக்கட்டைகளை "ஓடினவன் திரும்பி நின்னா, திருப்பி அடிச்சா....." எப்படி அதிரடியாய் இருக்கும்? என்பதற்கேற்ப திருப்பி அடிச்சு தகர்த்தெரிகிறார்களா? அல்லது, நம் சமூக கொடூரங்களில் சிக்கி தவிடு பொடியாகின்றனரா....? என்பது தான் "கோலி சோடா" படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல்... எல்லாம்!


goli soda 2 movie review
Goli Soda 2 Movie Review


தாதாவின் கார் ஓட்டுனர் மாறனாக இப்பட இயக்குனர் விஜய் மில்டனின் சகோதரர் பரத் சீனி, ஆட்டோ ஓட்டுனரில் இருந்து கார் ஓட்டுனராக துடிக்கும் நிஜத்தில் இயக்குனர் லிங்குசாமியின் உறவக்கார பையன் வினோத், ஒட்டலில் வேலை பார்த்தபடி, காதலித்தவளை கைபிடிக்கத் துடிக்கும் பேஸ்கட் பால் இளைஞர் உளி, எனும் இசக்கிபரத் ஆகிய மூவரும் இளம் நாயகர்களாக அசத்தல் என்றால் அதில் மூவருக்கும் ஜோடியாக வரும் நாயகியர் பேபி இன்னசென்ட் இன்பா, தற்கொலை முயற்சிக்கும் இன்னொரு நாயகி, கொய்யாவிற்கும் மற்றொரு நாயகியும் கூட செம மிரட்டல்.

வில்லன்கள துறைமுகம் தில்லை, காதலை பிரிக்கும் ஜாதி கட்சி தலைவர், சமுத்திரகனி, "சிட்டிசன்" சரவண சுப்பையா, விசாரணை அதிகாரியாக வரும் கெளதம் வாசுதேவ் மேனன் (!), ஈ.ராமதாஸ்.... ஆகிய இயக்குன நடிகர்களும்.. ரேகா, ரோகிணி, உள்ளிட்ட குணச்சித்திர நட்சத்திரங்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும், "ஒவ்வொருத்தனும், கிடைக்கிற வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கிட்டா உன் வாழ்க்கைக்கு நீ முதலாளி.... சரியா பயன்படுத்திக்கலைன்னா இன்னொருத்தன் வாழ்க்கைக்கு காலம் முழுக்க தொழிலாளி...." என குடித்தபடியே தத்துவவித்துவ டயலாக்கு களை அடித்து விடும் சமுத்திரகனி ஹாசம்!

இசைஞர் அச்சு ராஜாமணியின் இசையில், "பொண்டாட்டி நீ ஏன் பொண்டாட்டி நீ......", "அன்பே நீ யாரடி நீ..." "யாரும் வந்து அதிகாரம் செய்ய...." ஆகிய பாடல்களும், பின்னணி இசையும் மிரட்டல்!

எஸ்.டி.விஜய் மில்டனின் எழுத்து, ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில், சாதாரண இளைஞர்கள் சாதிக்கும் கதை.... தமிழ் சினிமாவுக்கே உரித்தான ஒரு சில லாஜிக் மிஸ்டேக் நிறை, குறைகள் ஆங்காங்கே தென்பட்டாலும் மிகச்சரியாக படமாக்கப்பட்டிருக்கிறது.. சபாஷ்!

மேலும், விஜய் மில்டனின் இயக்கத்தில், ஜாதி சங்க கட்சிகூட்டத்திற்குள், 3 இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்த முற்பட்டு தப்புவது, க்ளைமாக்ஸில் 3 வில்லன்களையும் அத்தனை அடியாள் கும்பலில் புரட்டி எடுத்து விட்டு மூவரும் தப்புவது உள்ளிட்ட நம்ப முடியாத ஹம்பக் காட்சிகள் இப்படத்திற்கு சற்றே பலவீனம். மற்றபடி, "இப்போல்லாம் சரியா இருந்தா தான் ஏதோ தப்பு இருக்கிறதா நம்புறாங்க...", "நீ மிஸ் பண்ணியதை அவன் நல்லா, யூஸ் பண்ணிகிட்டான்...", "ஓடினவன் திரும்பி நின்னா, திருப்பி அடிச்சா.....", அடையாளத்துக்காக போராடியவன் எப்பவும் தோத்தது இல்ல...." உள்ளிட்ட வசனங்களும், டேய் எங்கடா போறோம்? எனும் காதலியிடம் ரெட்டேரி சர்ச்சுக்கு.... எனும் காதலர் அங்க தான் யாருமே இருக்க மாட்டாங்க... என்பதும், "குடிச்சுட்டு குளிச்சா பாத்ரூம்ல வழுக்கி விழுந்துடுறேன்.... அசுதான்குளிச்சுட்டு குளிக்கிறேன்." எனும் ஒரு குடிகாரரின் அங்கா லாயிப்பு, "வர வர எனக்கு பேன்ஸ் அதிகமா ஆயிட்டாங்கடா... எனும் நண்பனிடம் முடி அதிகமா இருந்தா பேனும் அதிகமா தான் இருக்கும்.... எனும் நாயகர் ஒருவரின் குசும்பு உள்ளிட்ட டைமிங் காட் உ|களும் இப்படத்திற்கு பெரும் பலம்.


Goli Soda 2 Tamil Review


மொத்தத்தில், "கோலி சோடா - 2 '- "கோலி சோடா -1" மாதிரியே தமிழ் சமூகம், ரசித்து பருக வேண்டிய 'பன்னிர் சோடா!"

Rating: 3.75/5

Latest