கத்தி கதறியும் யாரும் கண்டு கொள்ளாததால் தெறித்து ஓடிய காயத்ரி - என்னாச்சு தெரியுமா?

April 16, 2018


நடிகையும் நடன இயக்குனருமான காயத்திரி ரகுராம் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் பிரபலமானாலும் மிகவும் எதிர்மறையான விமர்சனத்தை தான் பெற்று வந்தார்.


gayathri rahuram
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் ட்விட்டரில் என்ன செய்தாலும் நெட்டிசன்கள் படு பங்கமாக கலாய்த்தெடுத்து வந்தனர். இதனால் ஒரு கட்டத்தில் ஆவேசமான காயத்ரி ரகுராம் இனியும் தன்னை கலாய்த்தால் வழக்கு தொடர்வேன் என கூறி இருந்தார்.


gayathri rahuram

ஆனாலும் நெட்டிசன்களும் யாரும் அடங்கவில்லை. மேலும் சமீபத்தில் கூட மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்த போது கேரளா பெண் ஓவியாவை கொண்டாடனீங்க, தமிழச்சி என்னை கொண்டாடல என கூறி ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்டார்.


இதனால் தான் கத்தியும் கதறியும் ஒன்னும் நடக்காததால் தற்போது அனைவருக்கும் குட் பாய் சொல்லி ட்விட்டரை விட்டே தெறித்து ஓடியுள்ளார். இதனால் ஓவியா ஆர்மியினர் நிம்மதி அடைந்துள்ளனர்.