தெலுங்குவில் உருவாகி மெகா ஹிட்டாகி இருந்த அர்ஜுன் ரெட்டி படம் தற்போது தமிழில் வர்மா என்ற பெயரில் ரி-மேக் செய்யப்பட்டு வருகிறது.

பாலா இயக்கி வரும் இந்த படத்தில் ஹீரோவாக விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கௌதமி மகள் சுப்புலட்சுமி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இது குறித்து தற்போது கௌதமி விளக்கமளித்துள்ளார். என்னது என் மகள் நடிக்க உள்ளாரா? அவர் தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். நடிக்க உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என கூறியுள்ளார்.