சர்கார் அப்டேட் கேட்ட ரசிகர்கள், பிரபலத்தின் கோபமான ட்வீட் - ஆனால் ஹாப்பி நியூஸ்.!

September 14, 2018


தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் என்ன பதிவு செய்தாலும் சர்கார் அப்டேட் எங்க என தொந்தரவு செய்து வருகின்றனர்.


sarkar
அதே போல பாடலாசிரியர் விவேக்கிடமும் ரசிகர்கள் சர்க்கார் அப்டேட் சொல்ல சொல்லி தொடர்ந்து கேட்டு வந்துள்ளனர். இதனால் விவேக் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கோபமாக பதிவு ஒன்றை செய்துள்ளார்.


அந்த பதிவில் என்னால் அப்டேட் எதுவும் கொடுக்க முடியாது. காத்திருங்கள். நீங்கள் விஜயின் மீது வைத்துள்ள அன்பால் அப்டேட் கேட்டு கொண்டே உள்ளீர்கள். தயாரிப்பு நிறுவனம் சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறது என நினைக்கிறன்.


அமைதியாக காத்திருங்கள் அப்டேட் கொடுக்க ஆரம்பித்தால் இரண்டு மாதங்களுக்கு வரும். அவ்வளவு தகவல்கள் குவிந்துள்ளன என கூறியுள்ளார். 2 மாதத்திற்கு தொடர்ந்து அப்டேட் வரும் என கூறியிருப்பதால் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.