சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் பிரம்மாண்ட இசையமைப்பாளர் - ரசிகர்கள் குஷி.!

January 12, 2018


தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இடம் பிடித்து விட்டார் சிவகார்த்திகேயன், இவரது நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் இறுதியாக வெளியாகி இருந்த வேலைக்காரன் படம் உலகம் முழுவதும் மிக சிறந்த வரவேற்பை பெற்றது.


sivakarthikeyan
இந்த படத்திற்கு அடுத்ததாக பொன்ராம் இயக்கத்தில் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார், ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் உருவாகி இருந்த 2 படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதால் இந்த படத்திற்கும் பலத்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.


இந்த படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்திலும் இன்று நேற்று நாளை என்ற படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கும் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளாராம்.


ரவிக்குமார் இயக்கும் படத்திற்கு பிரம்மாண்ட இசையமைப்பாளரும் இசைப்புயலுமான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஒப்பு கொண்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.