சர்ச்சைக் கருத்தை பதிவிட்டு வம்பில் சிக்கிய பிரபல இயக்குனர்?

May 19, 2017


ராம்கோபால் வர்மா இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் "சர்க்கார் 3". தெலுங்கிலிருந்து ஹிந்திக்கு சென்ற ராம்கோபால் வர்மா பாகுபலி - 2 படத்தை தொடர்ந்து "சர்க்கார் 3" படத்தை வெளியிட்டார்.இந்நிலையில் இப்படம் தோல்வியடைந்து விட்டதாக கூறப்படுகிறது.


ramgopal varma
Who is the famous director of the controversy?


இதனால் எங்கு தன்னை மட்டம் தட்டி விடுவார்களோ என பயந்து தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு பாகுபலி-2 படத்தை பற்றி கருத்து தெரிவித்திருந்தார்.அதில் ; மிகப்பெரும் ஹிந்தி படம், மிகப்பெரும் தமிழ் படம் ,மிகப்பெரும் கன்னடப்படம் ,மிகப்பெரும் மலையாளப்படம் என்று சொல்லப்படும் ஒரு தெலுங்கு டப்பிங் படத்தைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.என பதிவிட்டிருந்தார்.


அதையடுத்து மறுபடியும் ஒரு கருத்தை பதிவிட்டு கன்னடர்களை வம்புக்கு இழுத்துள்ளார் ராம்கோபால் வர்மா.அவர் பதிவில் ; கன்னடத்தில் மிகப்பெரும் படங்கள் என்று சொல்லப்பட்ட படங்களை விட பாகுபலி-2 தெலுங்குப் படம் இடிஇடிக்கும் அளவிற்கு பெரிய வெற்றியை பெற்றுள்ளதன் மூலம் கன்னடர்கள் பெருமை பட ஒன்றுமில்லை.

டப்பிங் படத்தை தடுத்து நிறுத்தினாலும் அந்த முயற்சியை ஒரு நேரடி தெலுங்குப்படம் அதை தகர்த்துவிட்டது.இதன்மூலம் கன்னடர்கள் பெருமைப்படத் தேவையில்லை.அவர்கள் நல்ல படங்களை விரும்புகிறார்கள் என்று தெரிகிறது.

நேரடி கன்னடப் படங்களை விடஒரு தெலுங்குப் படத்தை பல முறை பார்த்து ரசித்ததற்காக மற்ற கன்னடர்களை எதிர்த்து பெருமை பேசும் கன்னடர்கள் போராடட்டும். என குறிப்பிட்டுள்ளார்.

இவரின் இத்தகைய கருத்துக்கு கன்னடக்காரர்கள் உடனடி பதில் அனுப்பியுள்ளனர்.அனேகமாக இவரின் இந்த கருத்தால் தெலுங்குப் படங்கள் கர்நாடகாவில் வெளிவருவது கொஞ்சம் சந்தேகம் தான்.