மாஸ் டைட்டிலை அஜித்திடம் இருந்து பிடுங்கிய பிரபல நடிகர் - ரசிகர்கள் அதிர்ச்சி.!

June 21, 2018


தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தனக்கென தனி ஸ்டைல், தனி வழி என இருந்து வருகிறார். மேலும் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பலத்தை பற்றியும் யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

தல அஜித்தின் படத்திற்காக வைக்கப்பட இருந்த காட் பாதர் என்ற டைட்டிலை தற்போது தன்னுடைய படத்திற்கு வைத்துள்ளார் நட்டி நட்ராஜ்.


thala
ஒளிப்பதிவாளரான நட்டி நட்ராஜ் சதுரங்க வேட்டை படத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார், அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அவை அந்த அளவிற்கு பெரியதாக செல்லவில்லை


இந்நிலையில் தற்போது இவரது நடிப்பில் வெளியாக உள்ள புதிய படத்திற்கு காட் பாதர் என்று டைட்டில் வைத்துள்ளனர். இது அஜித்தின் நடிப்பில் உருவான வரலாறு படத்திற்கு முதலில் வைக்கப்பட்டிருந்த டைட்டில் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் வரி விலக்கிற்காக அப்போது காட் பாதர் டைட்டிலை வரலாறு என மாற்றி வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


thala