தல தளபதி வச்சு படமா? இந்த படத்தோட ரீமேக்கா? - அட்லீயை கலாய்த்த நெட்டிசன்கள்.!

May 16, 2018


தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார்களாக விளங்கி வருபவர் தல தளபதி. இவர்கள் இருவரை வைத்து படம் இயக்க திட்டமிட்டுள்ளதாக அட்லீ சமீபத்தில் திருப்பதியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார்.


thala
இதனை சன் நியூஸ் நிறுவனம் செய்தியாக வெளியிட்டு பின்னர் அதனை ட்விட்டரில் இருந்து நீக்கி இருந்தது. இது உண்மையாக இருக்க வேண்டும். அப்படி ஒரு படம் வந்தால் நிச்சயம் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.


இது ஒரு புறம் இருந்தாலும் நெட்டிசன்கள் அட்லீயின் ஒவ்வொரு படத்தின் போதும் இந்த படத்தின் காபி, அந்த படத்தின் காபி என கூறி கலாய்ப்பதை போல அஜித் விஜயை இணைத்து படம் என்றால் தளபதி பட ரீமேக்கா என கலாய்த்து உள்ளனர்.


thala

ஆனால் ரசிகர்களோ சீக்கிரம் இப்படியொரு படத்தை எடுங்க அட்லீ என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Latest