மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!

April 17, 2018


பிரபல கல்லூரியை சேர்ந்த பேராசிரியை ஒருவர் தன்னுடைய கல்லூரி மாணவிகளை மைண்ட் வாஸ் செய்து அவர்களை பாலியல் தொழிலுக்கு அழைத்த ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி ஒட்டு மொத்த பெற்றோர்களையும் அதிர்ச்சியாக்கியது.


thalapathy
ஒரு சில தனியார் கல்லூரியில் தான் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன, இதனை பற்றி தளபதி விஜய் பைரவா படத்தில் கூறியிருப்பது தற்போது இந்த சம்பவத்துடன் சரியாக பொருந்துகிறது.


thalapathy

பைரவா படத்தில் கல்லூரி மாணவியை தங்களுடைய சுயலாபத்திற்காக விபசாரத்தில் ஈடுபடுத்தி கொன்று விடுவார்கள். இதனை எதிர்த்து போராடி சம்மந்தப்பட்டவர்களுக்கு சரியான தண்டனையை வாங்கி கொடுப்பார் விஜய்.


மேலும் இறுதியாக கல்வி அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காக தான் தனியாரிடமும் கல்வி வழங்கும் உரிமையை அரசாங்கம் கொடுத்திருக்கு அது தவறு இல்லை ஆனால் ஒவ்வொருத்தருக்கும் ஒரு தகுதி இருக்கு, ஒரு மாணவனிடம் மாணவனுக்கான தகுதி இருக்கானு பார்க்கிறோம்.

அதே போல் ஒரு ஆசிரியருக்கு ஆசிரியருக்கான தகுதி இருக்கானு பார்க்கிறோம். ஆனால் ஒரு கல்லூரியை நிர்வகிக்கிறவருக்கு அதற்கான தகுதி இருக்கானு பார்ப்பதில்லை என கூறியிருப்பார். இந்த சம்பவத்திலும் அதே தான் கல்லூரியின் முதலாளி சரியாக நிர்வகித்து இருந்தால் இது போன்ற தவறுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
Latest