அந்த சாக்கடை பத்தி பேசாதே, சர்ச்சையை கிளப்பிய பிக் பாஸ் ப்ரோமோ.!

June 20, 2018


பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நிகழ்ச்சியை பற்றி தினமும் 4 ப்ரோமோக்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்றி விடுகின்றன.


bigg boss
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் தாடி பாலாஜி பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதலில் பாலாஜியிடம் மும்தாஜ் அவருடைய மனைவியை பற்றி விசாரிக்கிறார்.


பின்னர் தாடி பாலாஜியிடம் சென்ட்ராயன் நித்யாவை பற்றி பேச உடனே பாலாஜி சாப்பிடும் போது எதுக்கு அந்த சாக்கடையை பற்றி பேசுற? என மூஞ்சில் அடித்தது போல கூறுகிறார்.


bigg boss

என்ன தான் பிரச்சனையாக இருந்தாலும் ஒரு பெண்ணை எப்படி சாக்கடை என கூறலாம் என நெட்டிசன்கள் பாலாஜியை வறுத்தெடுக்க தொடங்கியுள்ளனர். பாலாஜி உண்மையில் எதற்காக அந்த வார்த்தையை கூறினார்? என்ன பிரச்னை என்பது இன்றைய எபிசோடில் தான் தெரிய வரும்.