திருமணம் வேண்டாம் ஆனாலும்? - பிரபல நடிகையால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!

June 23, 2018


தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான நடிகைகள் திருமணம் முடிந்து விட்டால் திரையுலகில் வாய்ப்புகள் கிடைக்காது, மார்க்கெட் போய் விடும் என முழுமையாக நம்புகிறார்கள். இதனாலேயே பல முன்னணி நடிகைகள் திருமணத்தை தள்ளி போட்டு வருகின்றனர்.


laxmi menon
தமிழில் கும்கி படத்தில் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து பிரபல நடிகையானவர் லஷ்மி மேனன். இந்த படத்தை அடுத்து பல படங்களில் நடித்து வந்த அவர் பின்னர் வாய்ப்புகள் இல்லாமல் மார்க்கெட்டை இழந்தார்.


நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பிரபு தேவாவுடன் யங் மங் சங் என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார், இந்த படத்திற்காக இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் திருமணம் எப்போது என கேட்டுள்ளனர்.


laxmi menon

அதற்கு லட்சுமி மேனன் தனக்கு திருமண வாழ்க்கையில் ஈடுபாடு இல்லை எனவும் திருமணம் செய்தால் தான் அன்பு, காதல் கிடைக்கும் என்பதில்லை, கல்யாணம் ஆகாமலும் பெறலாம் எனவும் கூறியுள்ளார். திருமணத்தில் ஈடுபாடு இல்லை என கூறியிருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.