லிஸ்ட்டில் விஜய் இல்லையா? அனிருத்தை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!

June 14, 2018


தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக விளங்கி வருபவர் அனிருத். அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர்.


thalapathy
இவர் சமீபத்தில் சென்னையில் நடந்த வெங்கட் பிரபுவின் ஆர்.கே.நகர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது நான் தலைவர், தல படம் ரிலீஸானாலே முதல் நாள் முதல் காட்சியை பார்த்து விடுவேன்.


இவர்களுக்கு அடுத்தாக சிவாவின் படங்களை மிஸ் பண்ணாமல் பார்ப்பேன். தலைவர் மற்றும் தல அஜித்திற்கு அப்புறம் சிவா தான். இதை நான் மேடைக்காக சொல்லவில்லை. உண்மையாக தான் சொல்கிறேன் என கூறியிருந்தார்.

அனிருத் பேசும் போது தளபதி விஜயின் பெயரை சொல்லாமலே பேசி விட்டார், தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங்கான விஜய் உங்களோட லிஸ்டில் இல்லையா? என அனிருத்தை திட்டி தீர்த்து வருகின்றனர் தளபதி ரசிகர்கள்.


thalapathy