என்னமா நீ இன்னும் போகலயா? மீண்டும் நெட்டிசன்களிடம் சிக்கிய காயத்ரி.!

April 17, 2018


நடிகையும் டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம் தன்னை ட்விட்டரில் கலாய்ப்பதை நிறுத்த சொல்லி நெட்டிசன்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் இவரது பேச்சை ஒருத்தரும் கேட்ட பாடில்லை.


gayathiri rahuram
இதனால் தனக்கு யாரும் ஆதராவாக இல்லை என கூறி இனி நான் ட்விட்டருக்கு வர மாட்டேன், இது தான் என்னுடைய கடைசி ட்வீட் என கூறியிருந்தார்.


gayathiri rahuram

ஆனால் அதன் பின்னரும் இரண்டு டிவீட்களை பதிவு செய்திருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்க ட்விட்டரை விட்டு போறேன்னு சொல்லிட்டு இன்னும் ட்வீட் போட்டுட்டே இருக்கீங்க, இன்னும் போகலையா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


gayathiri rahuram

மேலும் பெண்களுக்கு அரசியலில் பாதுகாப்பு இல்லை என கூறியுள்ளார், ஆனாலும் நான் தொடர்ந்து அரசியலில் இருப்பேன். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தொடர்ந்து குரல் மகொடுப்பேன் என கூறியுள்ளார்.

மேலும் ஜெயலலிதா உண்மையாகவே ஒரு இரும்பு மனுஷி எனவும் கூறி டீவீட்டியுள்ளார். ஆனாலும் நெட்டிசன்கள் இவரை நீங்க இன்னும் போகலையா என கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
Latest