விஜயுடன் நடிக்க மறுத்தாரா ஓவியா? - வைரலாகும் அதிர்ச்சி தகவல்.!

December 6, 2017


தளபதி விஜய் விரைவில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க உள்ளார். அதற்கான வேலைகள் தற்போது மும்மரமாக நடந்து வருகின்றன, மேலும் படத்தில் நடிப்பதற்கான நடிகர், நடிகைகளின் தேர்வும் நடந்து வருகிறது.


oviya
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விஜயின் தங்கையாக நடிக்க ஓவியாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


ஆனால் ஓவியா என்னது தங்கை கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டுமா? அதெல்லாம் முடியவே முடியாது என கூறி விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.


மேலும் ஒரு முறை தங்கை கேரக்டரில் நடித்து விட்டால் சினிமாவில் மதிப்பு போய் விடும் என்பதால் ஓவியா மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இருந்தாலும் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது சம்மந்தப்பட்டவர்கள் கூறினால் தான் உறுதியாக தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest