தீபிகாவின் தலையை வெட்டினால் ரூ 10 கோடி பரிசு - சர்ச்சையை கிளப்பிய பா.ஜ.க நிர்வாகி

November 20, 2017


தீபிகா, ரன்வீர் சிங் ஆகியோர் சேர்ந்து நடித்துள்ள பத்மாவதி படத்தை பன்சாலி இயக்கி உள்ளார். இந்த படம் அனைத்து பணிகளிலும் நிறைவடைந்து டிசம்பர் மாதத்தில் வெளியாக உள்ளது.


deepika
இந்நிலையில் தற்போது படத்திற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர், வட மாவட்டங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தீபிகா மற்றும் படக்குழுவினருக்கு எதிராக பலரும் ஆவேசமாக கருத்துகளை கூறி வருகிறார்கள்.


இதனை தொடர்ந்து தற்போது தீபிகாவின் தலையை வெட்டுபவர்களுக்கு ரூ 10 கோடி அளிக்கப்படும் என ஹரியானாவை சேர்ந்த பா.ஜ.க தலைமை செய்தி ஒருங்கமைப்பாளர் சூரஜ்பால் அமு அறிவித்திருப்பது மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


இவருடைய இந்த அறிவிப்பு பா.ஜ.க தலைமையும் கண்டித்து உள்ளது, மேலும் பொது மன்னிப்பு கேட்க வேண்டு எனவும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Latest