உலக நாயகன் கமல்ஹாசனுக்கு குவியும் பாராட்டுக்கள்.!

February 22, 2018


உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று முதல் தன்னுடைய முழுநேர அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். தன்னுடைய கட்சியின் சின்னத்தை வெளியிட்ட அவர் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயர் சூட்டியுள்ளார்.


kamalhaasan
அரசியல் கட்சியின் சின்னத்தையும், பெயரையும் நேற்று மதுரையில் நடந்த முதல் பொது கூட்ட மேடையில் அறிவித்தார். இவருக்கு ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


இந்நிலையில் தற்போது பாரதி ராஜா பன்னாட்டு திரைப்பட பயிற்சி பட்டறை சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.