ரசிகர்களை பெருமைப்பட வைத்த தல, தளபதி - காதலர் தின ஸ்பெஷல் தகவல்.!

February 14, 2018


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்துடன் வலம் வருபவர்கள் தல தளபதியான அஜித்தும் விஜயும். இவர்களை எப்போதுமே ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.


thala
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது, இதனை தற்போது தல தளபதி ரசிகர்கள் பெருமையுடன் கொண்டாடி வருகின்றனர்.


திரையுலகில் உள்ள நடிகர் நடிகைகள் சிலர் காதல், திருமணம் என்பதெல்லாம் சாதாரண விசயமாக இருக்கும் இந்த காலத்தில் விஜய் தன்னுடைய தீவிர ரசிகையான சங்கீதாவை பெற்றோர்கள் சம்மத்துடன் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.


அதேபோல் தல அஜித்தும் ஷாலினியை காதலித்து திருமணம் இன்று வரை அவரை காதலித்து வருகிறார், இதனை இரண்டு தரப்பு ரசிகர்களுமே மகிழ்ச்சியுடன் கூறி கொண்டாடி வருகின்றனர்.

மேலும் இவர்களை போல சூர்யா, சிவகார்திகேயன் என பல நடிகர்களும் உள்ளனர். இவர்களின் ரசிகர்களும் பெருமையுடன் காதலர் தினங்களை கொண்டாடி வருகின்றனர்.