திரையுலகில் மாற்றம் கொண்டு வர ஒன்று சேர்ந்த திரையுலக ஜாம்புவான்கள்

August 11, 2017


இந்திய துணை கண்டத்தில் அதிக படங்கள் தயாரிக்கப்படுவதில் தமிழ் மொழிக்கு இரண்டாம் இடம். முதலீடு, வருமானம், தொழில் நுட்பம் இவற்றில் வளர்ச்சியடைந்த நிலையில் உள்ள தமிழ் சினிமா துறையில் திட்டமிடுதல், வெளிப்படை தன்மை இல்லை இதனாலேயே தயாரிப்பு, வியாபாரம், வசூல் இம்மூன்றை பற்றிய சரியான தகவல்களை பொது வெளியில் பெற முடிவதில்லை.


cinema
பிரதான வருவாய் துறையாக இருக்கும் தியேட்டர் கணக்குகள் எப்போதும் சந்தேகத்துக்கு உரியது. திரையரங்குகள் ஒரு பக்கம் மூடப்பட்டு வணிக வளாகங்களாக மாறிய குழலில் கார்பரேட் நிறுவனங்கள் நகரங்களில் மல்டி பிளக்ஸ் வளாகங்களை நிறுவின. புறநகர் பகுதிகளில் இயங்கி வந்த தியேட்டர்கள் நவீனப்படுத்த படாமல் தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்தன.

தியேட்டர்களை நவீனப்படுத்துவது, அதற்கான கருவிகளை எங்கு கொள்முதல் செய்வது என்பது சிங்கிள் ஸ்க்ரீன் உரிமையாளர்களுக்கு எட்டாக்கனியாக இருந்து வந்தது. நெருக்கடியான இந்நிலையில் ஆகஸ்ட் 8, 9 நாட்களில்சென்னை நந்தம்பாக்கம் வணிக வளாகத்தில் பிக் சினிமா எக்ஸ்போ 2017 நிகழ்ச்சி நடடைபெற்றது..


எதிர்கால தியேட்டர்கள் நிலை குறித்தும் எப்படி எல்லாம் ரசிகர்களை தியேட்டருக்கு வர வைக்கலாம் என்பதில் தொடங்கி என்ன என்ன படங்கள் எல்லாம் வசூலை வாரி குவித்தன என்பது வரை இரண்டு நாள் கருத்தரங்கில் அனேக விஷயங்களை ஆசியா கண்டம் முழுவதும் இருந்து வருகை தந்திருந்த திரையுலக ஜாம்பவான்கள் பேசினார்கள்.

அது மட்டுமல்ல புரெஜெக்ஷன், சீட், ஆம்பியன்ஸ், ஸ்பீக்கர்ஸ், பார்ப்கான் மெஷின் என்று ஸ்டால்கள் வைத்து ஏன் நாம் ஒரு தியேட்டர் கட்டக்கூடாது என்னும் அளவுக்கு இரண்டு நாள் நிகழ்வுகளும் நிகழ்ச்சியை காண வந்தவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தின. மிக முக்கியமாக இந்த நிகழ்ச்சிதியேட்டர் ஒனர்களுக்கானது. தத்தமது தியேட்டர்களை எந்த வகையில் எல்லாம் மேம்படுத்திக்கொள்ளலாம் என்று் கருத்தரங்கில் நிறைய விஷயங்கள் பறிமாறிக்கொள்ளப்பட்டன.

ஆனால் வழக்கம் போல அதிக அளவில் நமது தியேட்டர் ஓனர்கள் கலந்துக்கொள்ளவில்ல என்பதுதான் பெரும் சோகம். முதல் நாள் கருத்தரங்கில் கொலம்பியாவை சேர்ந்த சினி கியூ அன் சி நிர்வாகி் செமினார் எடுத்தார்.. ஒரு சின்ன டிவைஸ் வைத்துக்கொண்டு ஒரு தியேட்டரை ஒருவரே நிர்வாகிக்க முடியும் என்று விளக்கினார்..

ஒரு பிரமாண்ட திரையரங்கையே டிரேட் சென்டரில் நிறுவி இருந்தார்கள்… இரண்டாம் நாள் கருத்தரங்கில் தியேட்டர்களை நிர்வாகிக்கும் பெண்கள் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் படம் பார்க்க வரும் பெண்களின் நிலை அவர்கள் பாதுகாப்பு குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.. இதில் அபிராமி மெகா மால் நிர்வாக இயக்குனர் மெய்யம்மை ராமநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


நிறைய நல்ல விஷயங்கள் கலந்தாலோசிக்க பட்டாலும் அவைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்ததும்… நமது தமிழ்நாடுதியேட்டர் ஓனர்களை கொஞ்சம் நெளிய வைத்தது. அதே வேளையில் சென்னையில் நடைபெற்றஇந்த பிக் சினிமா எக்ஸ்போ நல்ல ஆரம்பம் என கூறலாம்... அதே வேளையில் தமிழகத்தின் கடைகோடியில் இருக்கும் டாக்கிசில் இருந்து தியேட்டருக்கு கன்வெர்ட் ஆனா தியேட்டர் முதலாளிக்கு இன்னும் புரியும் வகையில் இது போன்ற நிகழ்ச்சிகள் இன்னும் எளிமை படுத்த வேண்டும் என்கிறார் தியேட்டர் உரிமையாளர் ஒருவர்.

தியேட்டர் வேர்ல்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பிக் சினி எக்ஸ்போ .2017 விழாவை தமிழ் சினிமா வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய ராமநாதன்.

GSTவரி விதிப்பால்டிக்கட் கட்டண உயர்வு, அதனால் சினிமா பார்க்க வருபவர்கள் குறைந்து வருகிறார்கள். இதனால் டிக்கட் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று கூறி வரும் சூழலில் GSTவரி விதிப்பால் தமிழ் சி னிமாவுக்கு வசூல் பாதிப்பு இல்லை என்றார்.

திரையரங்குகளை பொறுத்தவரை சீட், ஒலி, ஒளி அமைப்பு, உள்அரங்க அலங்காரம் பிரதானமானது. தமிழகத்தில் உள்ள தியேட்டர்களை நவீனப்படுத்தவும், பிற தேவைகளுக்காக வெளி மாநிலம் அல்லது வெளிநாட்டு நிறுவனங்களை தொடர்பு கொள்ள வேண்டிய சிரமம இனிமேல் இருக்காது என்றார்.மற்ற தொழில் துறை சார்ந்த கண்காட்சிகள் கருத்தரங்குகள்சாதாரணமாக சென்னையில் நடப்பது வழக்கம். தியேட்டர்களை நவீனப்படுத்த அத்துறை சார்ந்த கண்காட்சி கருத்தரங்கம்நடத்தப்பட்டது இல்லை இக்குறையை போக்கும் வகையில்

சென்னை நந்தம்பாக்கம் தொழில் வர்த்தக வளாகத்தில் "பிக் சினி எக்ஸ்போ ஏற்பாடு செய்யப்பட்டி ருப்பது தமிழ் சினிமாவுக்கு வழிகோலும் என்றார்.இந்நிகழ்ச்சியில் ஆசியா கண்டம் முழுமையும் உள்ள திரையரங்குகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அத்துடன் உலக அளவில் தியேட்டர் தொழில் சம்பந்தபட்ட நிறுவனங்களின்அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன ராமநாதன் பேசுகிற போது GST, கேளிக்கை வரி விதிப்பால் திரையரங்குகள் நவீனப்படுத்தி நல்ல சினிமாக்கள், மக்கள் ரசிக்க கூடிய படங்களை திரையிட்டால் வசூல் குவியும், எந்த வரி விதிப்பும் தொழிலை பாதிக்காது என்பதை சமீபத்தில் வெளியான படங்களின் வசூல் உறுதிப்படுத்தியுள்ளது என்றார்.

கேளிக்கை வரி சம்பந்தமாக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை என்ன முடிவு என்ற கேள்விக்கு இன்னும் சில தினங்களில் கேளிக்கை வரி சம்பந்தமாக நல்லதொரு அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என கூறிய ராமநாதன் நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்களை பற்றி மட்டுமே எல்லா தரப்பினரும் கவலைப்பட்டுக் கொண்டு பேசி வரும் நிலையில் தமிழ் சினிமா தயாரிப்பு துறைக்கு பிரதான வருவாய் ஈட்டி தரக்கூடிய தியேட்டர்களை பற்றி கவலைப்பட்டு அதற்காக சிறப்பு கண்காட்சி ஒன்றை சென்னையில் நடத்திய தியேட்டர் வேர்ல்டு நிறுவன உரிமையாளர் ராகவ் அவர்களை பாராட்டுகிறேன் என்றார்.

தமிழகத்தில் தியேட்டர்களை நவீனப்படுத்தி சினிமா பார்க்க வரும்ரசிகனுக்கு புதுமையான அனுபவத்தை கொடுக்க திரையரங்கு உரிமையாளர்கள் முயற்சிப் பார்கள் என்றார் அபிராமி ராமநாதன். தொடக்க விழா நிகழ்ச்சியில் அபிராமி ராமநாதன், கியூப் நிறுவன உரிமையாளர் செந்தில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் திருச்சி ஶீதர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசியா கண்டத்தில் முதல் முறையாக நடத்தப்பட்ட எக்ஸ்போ கருத்தரங்கு, கண்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.