பிரபு தேவாவின் அடுத்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் - அதிரடி தகவல்.!

February 19, 2018


நடன புயல் பிரபு தேவா தேவி படத்தை அடுத்து குலேபகாவாலி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின்பு மீண்டும் தேவி பட இயக்குனர் இயக்கத்தில் லட்சுமி என்ற படத்தில் நடித்து வருகிறார்.


captan vijayakanth
இதனையடுத்து ஆகாஷ் சாம் இயக்கும் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த படம் பிரபு தேவாவிற்கு சிறந்த படமாக அமையும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


இந்நிலையில் தற்போது இந்த படத்தை பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்திற்கு கேப்டன் விஜய்காந்த் நடிப்பில் வெளியான ஊமை விழிகள் என்பதையே டைட்டிலாக வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.