ட்ரெஸ்ஸை கொடுக்காமல் 4 போட்டியாளர்களை கதற விடும் பிக் பாஸ்.!

June 18, 2018


சின்ன திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தொடங்கியது.


bigg boss
மொத்தம் 16 பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினராக ஓவியா என மொத்தம் 17 பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். போட்டியாளர்களை வைத்து பார்க்கும் போது நிச்சயம் வீடு ரணகளமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


மேலும் தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் 4 பேரின் லக்கேஜ் மட்டும் அனுப்பப்டாது என கூற உடைகள் இல்லாமல் எப்படி இருப்பது என புலம்ப ஆரம்பித்துள்ளனர்.


இவர்கள் புலம்புவதை பார்த்து ஓவியா உங்களை எல்லாம் பார்த்தா பாவமா இருக்கு என சிரிக்கிறார். இதனால் மாற்ற உடை இல்லாமல் அவதிப்பட போகும் அந்த 4 பிரபலங்கள் யார் என்பது இன்று இரவு தெரிந்து விடும்.