பக்கா பிளான் போட்டு காயத்ரியை காப்பாற்றிய பிக் பாஸ் - ரசிகர்கள் கொந்தளிப்பு.!

August 12, 2017


பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சில நாட்களிலேயே ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து டாப்பிற்கு சென்றவர் ஓவியா.


biggbosstamil
ஆனால் நிகழ்ச்சியில் இருந்து மன அழுத்தம் காரணமாக தானாகவே வெளியேறி ரசிகர்களை வருத்தமடைய செய்தார், ஆனால் இவர் வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவர் காயத்ரியும் சக்தியும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே .


இதனால் காயத்ரியின் மீது பயங்கர கடுப்பில் இருந்த ரசிகர்கள் இந்த வார எவிக்க்ஷனில் எப்படியாவது காயத்ரியை நிகழ்ச்சியில் இருந்து துரத்தி விட முடிவு செய்திருந்தனர்.


ஆனால் பிக் பாஸ் பிரபலங்களிடம் ஒரு சில கேள்விகளை கேட்டு அதற்கு சரியான பதிலை சொன்ன காயத்ரியை எவிக்ஷனில் இருந்து காப்பற்றுவதாக அறிவித்து விட்டார்.

இதனால் ரசிகர்களின் கோபம் இன்னும் பல மடங்கு அதிகமாகி விட்டது, நிகழ்ச்சியை அடியோடு வெறுக்கவும் தொடங்கி விட்டனர்.