பிக் பாஸ் வீட்டில் ரசிகர்களின் பேவரைட் நடிகர், கண்ணீர் விட்ட யாஷிகா - விடியோவுடன் இதோ

August 10, 2018


கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது 50 நாட்களை தாண்டி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.


bigg boss
இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் ஹரிஷ் கல்யாண் பிக் பாஸ் வீட்டிற்குள் பியார் பிரேம காதல் படத்தின் ப்ரோமோஷனுக்காக உள்ளே சென்றுள்ளார்.


அவர் மஹத்திடம் மஹத் யாஷிகா இடையே உள்ள உறவு நட்பையும் தாண்டி புனிதமானதா என ஹரிஷ் கேள்வி எழுப்ப மஹத் இல்லை என கூறுகிறார். யாஷிகா ஆம் என கூறுகிறார்.


இதனால் இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் மஹத் நோ என கூறியதால் யாஷிகா அழுவது போலவும் இவர்கள் இருவருக்கும் மும்தாஜ் அறிவுரை வழங்குவது போலவும் அந்த ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.