பிக் பாஸ் ஒரு நிகழ்ச்சியா? கமல் அப்போவே? - பிக் பாஸ் நிகழ்ச்சியை விளாசி எடுத்த பிரபலம்.!

June 14, 2018


பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய முதல் சீசனில் கலந்து கொண்டு தன்னுடைய பெயரை பயங்கரமாக டேமேஜ் செய்து கொண்டவர் காயத்திரி ரகுராம்.


bigg boss
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் ட்விட்டரில் எதை கூறினாலும் உடனே அவரை வறுத்தெடுப்பதையே ரசிகர்கள் குறிக்கோளாக வைத்து கொண்டுள்ளனர்.


இந்நிலையில் இவர் தற்போது பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கமலையும் பிக் பாஸையும் வறுத்தெடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களும் மக்களும் தான் முட்டாள்கள்.

நான் முதல் சீசனில் கலந்து கொண்ட போது வெளியில் சென்றதும் கமல் சார் எனக்கு பக்க பலமாக இருப்பதாக கூறினார், ஆனால் அதோடு அவர் என்னை கண்டு கொள்ளவே இல்லை என கூறி உள்ளார். அப்போதே அவர் முழு அரசியல்வாதியாகி விட்டார்.


bigg boss