ரிலீசுக்கு முன்பே சிவகார்த்திகேயனின் புது படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வெற்றி - வியக்கும் திரையுலகம்.!

February 13, 2018


தமிழ் திரையுலகில் கிடுகிடுவென உச்சத்தை தொட்ட நடிகர் என்றால் அது சிவகார்திகேயன் தான். படங்களில் காமெடி வேடங்களில் நடிக்க தொடங்கிய இவர் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராகி விட்டார்.


siva karthikeyan
மேலும் தன்னுடைய நகைச்சுவையும் திறமையும் கலந்த நடிப்பினால் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இறுதியாக மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி இருந்த வேலைக்காரன் படமும் மிக பெரிய வெற்றி பெற்றிருந்தது.


இதனையடுத்து தற்போது பொன் ராம் இயக்கத்தில் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.


ரவிக்குமாரும் சிவாவும் இணையும் படத்தின் ஷூட்டிங்கே இன்னும் தொடங்கவில்லை. ஆனால் அதற்குள்ளவே இந்த படத்தை பிரபல தொலைக்காட்சி ஒன்று மிக பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.
Latest