திவாலான கம்பெனி, மீண்டும் தள்ளி போகும் 2PointO? - என்னாச்சு தெரியுமா?

March 13, 2018


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் 2pointO படத்தில் நடித்து உள்ளார், ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே வருகிறது.


2pointo
இந்த வருட சுதந்திர தினத்திற்கு வெளியாகும் என எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தள்ளி போவதாக தகவல் கசிந்துள்ளது.


இந்த படத்தின் VFX காட்சிகளுக்கு பணியாற்றி வந்த அமெரிக்க நிறுவனம் ஒன்று திவால் ஆகியுள்ளது. இதனால் VFX பணிகள் வேறொரு கம்பெனியுடன் ஒப்படைக்க வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.


இதனால் படம் மீண்டும் தள்ளி போகும் என செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த வருட தீபாவளி அல்லது அல்லது அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகலாம் எனவும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.