இயக்குனர் பாலாவுடன் நேரடியாக போதும் மிஷ்கின், ராம் - பரபரப்பில் திரையுலகம்.!

January 12, 2018


தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களாக விளங்கி வருபவர்களில் பாலா, மிஷ்கின், ராம் ஆகியோர்களும் அடங்குவர், பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோரை வைத்து நாச்சியார் என்ற படத்தை இயக்கியுள்ளார்.


bala
அதேபோல் இயக்குனர் மிஸ்கின், ராம் ஆகியோர் நடித்துள்ள சவரக் கத்தி படத்தை ஜி.ஆர் ஆதித்யா இயக்கியுள்ளார், மிஷ்கின் கதை திரைக்கதை எழுதி தயாரித்து நடித்துள்ளார்.


இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன, இந்நிலையில் இந்த இரண்டு படங்களுமே பிப்ரவரி 9-ம் தேதி திரைக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.


இந்த இரண்டு படங்களில் வெற்றி பெறப் போவது யார் என்பதை அடுத்த மாதம் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.