கேரளாவில் பைரவாவுக்கு வரவேற்பு இல்லை – வருத்தத்தில் விநியோகஸ்தர்கள்!

Bairavaa-song-lyrics

தெறி வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் பைரவா. வெளியான கொஞ்ச நேரத்திலேயே படத்துக்கு கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் முதல்முறையாக விஜய் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கடந்த வாரம்வரை கேரளாவில் இப்படம் ரிலீஸாகுமா ஆகாதா என குழப்பம் நீடித்தது. ஆனால் ஒருவழியாக பிரச்சனை முடிந்து படம் கேரளாவில் ரிலீஸாகியுள்ளது. ஆனால் அங்கு மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் இப்படத்துக்கு சுத்தமாக வரவேற்பு இல்லையாம். எஞ்சியுள்ள தியேட்டர்களில் வரவேற்பு ஓரளவு பரவாயில்லையாம். இதற்கெல்லாம் காரணம் தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு இடையிலான பிரச்சனைதான் என கூறப்படுகிறது.