சேலத்தில் பைரவாவுக்கு இப்படியொரு நிலைமையா? புகைப்படம் உள்ளே!

January 12, 2017
kalakkalcinema.comBairavaa-movie-still2

தெறி வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் பைரவா. வெளியான கொஞ்ச நேரத்திலேயே படத்துக்கு கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் முதல்முறையாக விஜய் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


சேலத்தில் விஜய் படங்களுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. கிட்டத்தட்ட சேலத்தில் இன்று எல்லா திரையரங்குகளிலும் பைரவா வெளியாகியுள்ளது. ஆனால் இதில் ஒருசில திரையரங்குகளில் மட்டுமே படம் ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடுவதாகவும் பல இடங்களில் படத்துக்கு பெரிதளவில் ஓபனிங் இல்லை என்றும் ரிபோர்ட் கிடைத்துள்ளது. இதனால் 5.30 கோடி பணம் கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.


சேலத்தில் பிரசித்திபெற்ற திரையரங்கம் கீதாலயா. இத்திரையரங்கத்தில் இன்று காலை 11 மணிக்கு பைரவா படம்பார்க்க வந்த கூட்டம் இதோ இந்த புகைப்படத்தில்.IMG-20170112-WA0002


IMG-20170112-WA0001