ஃபேஸ்புக் லைவ்வில் பைரவா முழு படம் – படக்குழு அதிர்ச்சி!

bairavaa teaser vijay keethy suresh stills

பைரவா ரிலீஸ் நெருங்கிவரும் வேளையில் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் முதல்முறையாக விஜய் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படம் இந்தியாவில் நாளை வெளியாகிறது. ஆனால் மற்ற நாடுகளில் இன்று மாலையே இப்படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலர் இப்படத்தை தற்போது ஃபேஸ்புக்கில் லைவ்வாக ஒளிபரப்பி வருகிறார்கள்.

இது படக்குழுவினருக்கு மட்டுமல்லாது ரசிகர்களுக்கே பெரும் அதிர்ச்சியாக உள்ளது. முன்பெல்லாம் ஒரு படம் இந்தியாவில் வெளியானால் அன்று மாலை அல்லது இரவு அந்த படம் இணையத்தில் வெளியாகிவிடும். ஆனால் தற்போது இந்தியாவில் ரிலீஸாவதற்கு முன்பாகவே படம் இணையத்தில் வெளியாகிறது. இது இப்படியே சென்றால் நாளை சினிமா எந்த நிலையில் இருக்கும் என்பதை யூகிக்கவே முடியவில்லை.