திருநங்கையா நீ? ஆடையை கழற்றி காட்ட சொன்ன இயக்குனர் - நடிகை பகீர் தகவல்.!

April 17, 2018


இந்திய திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளதாக பல நடிகைகள் குற்றம் சாட்டி வருகின்றனர், தெலுங்கு சினிமாவில் இது போன்ற பழக்கம் அதிகமாக உள்ளதாக ஸ்ரீ ரெட்டி கூறி வருகிறார்.


sri reddy
இந்நிலையில் தற்போது ஸ்ரீ ரெட்டியை அடுத்து பல தெலுங்கு நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த அநீதிகளை பற்றி வாய் திறக்க தொடங்கியுள்ளனர்.


sri reddy

ஞாயிற்று கிழமை ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகைகள் பலர் பாலியல் சீண்டல்கள் பற்றி பேசியுள்ளனர்.


sri reddy

திருநங்கையான சோனா ரத்தோட் டிவியில் விளம்பரத்தை பார்த்து விட்டு ஆடிஷன் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு இயக்குனர் நீ உண்மையான திருநங்கை தானா? ஆடையை கவிழ்த்து காட்டி நிரூபி என கூறியதாக பொது மேடையில் கண்ணீருடன் கூறியுள்ளார்.

அதே போல ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஸ்ருதி வாய்ப்பு தருவதாக கூறி எங்களை படுக்கைக்கு அழைத்து சென்று விட்டு பின்னர் நீ கருப்பா இருக்க, குண்டா இருக்க என கூறி தங்களை நிராகரித்து விடுவதாக வேதனையுடன் கூறியுள்ளார்.

சுத்தமான இந்தியாக உருவாக வேண்டும் என அரசியல் தலைவர்கள் கூறி வருகிறார்கள், ஆனால் நாங்கள் படப்பிடப்புக்கு செல்லும் இடங்களில் கழிவறை வசதி கூட இல்லாமல் திறந்த வெளியில் செல்ல வேண்டிய நிலை உள்ளது எனவும் கூறியுள்ளார் ஸ்ருதி.

ஸ்ரீ ரெட்டியை அடுத்து ஒவ்வொருத்தராக வாய் திறந்து பாலியல் தொல்லைகளை பற்றி பேசி வருவது தெலுங்கு சினிமாவில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.