தளபதி-62 பர்ஸ்ட் லுக் பற்றிய அறிவிப்பு - ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.!

June 18, 2018


தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி 62 என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்து இருந்தனர்.


thalapathy 62
ரசிகர்கள் அனைவருமே தற்போது இந்த படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும்? பர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் ஆகும் என ஆவலுடன் அப்டேட்டிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


அதாவது இன்று மாலை தளபதி-62 பர்ஸ்ட் லுக் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் வைரலாகி வருகின்றன, ஆனால் படக்குழுவினரோ தயாரிப்பு நிறுவனமோ இதனை பற்றி எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் பர்ஸ்ட் லுக் பற்றிய அறிவிப்பு வெளியாவது உண்மையா? என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.


thalapathy 62