வரலாற்று கதையில் நிவின்பாலி ஜோடியாக நடிக்கும் அமலாபால்!

August 12, 2017


"36 வயதினிலே" புகழ் ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் "காயம்குளம் கொச்சுண்ணி"!


nivin pauly
Amalap to play opposite Nivin Pauly in the storyline


தூங்காவனம் , பழசிராஜா போன்ற வெற்றி படங்களை தயாரித்த கோகுலம் கோபாலன் வழங்கும் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கும் திரைப்படம் " காயம்குளம் கொச்சுண்ணி " இப்படத்தை " 36 வயதினிலே " , மும்பை போலீஸ் புகழ் ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்குகிறார்.


இதில் கொச்சுண்ணியாக நிவின் பாலி நடிக்கிறார் , கதாநாயகியாக அமலா பால் நடிக்கிறார். உதயநாணு தாரம்,மும்பை போலீஸ் , ஹவ் ஓல்ட் ஆர் யு போன்ற புகழ் பெற்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய பாபி மற்றும் சஞ்சய் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர்.

ஒளிப்பதிவு பினோத் பிரதான் , படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் , கலை சுனில் பாபு , இசை கோபி சுந்தர்.

costumes- Dhanya . Make up - Ranjith

கதை கரு :- காயம்குளம் கொச்சுண்ணி 19ஆம் நூற்றாண்டில் கயம்குளம் பகுதியில் வாழந்த பழம்பெரும் திருடன் ஒருவரை பற்றிய படமாகும். அத்திருடன் அப்போது வாழ்ந்த செல்வந்தர்களிடமிருந்து பணம் , பொருள் போன்றவற்றை திருடி நலிந்த மக்களுக்கு வழங்கி வந்துள்ளார் ( ராபின் ஹூட் போல ) .


அவருடைய குழந்தை பருவம் முதல் வறுமை வாட்டியெடுத்தது தான் இதை போன்ற விஷயங்களில் அவர் ஈடுபட காரணம் என்று கூறப்படுகிறது.

கேரள வரலாற்றில் இவரை போன்ற அன்பான , பயங்கரமான திருடன் ஒருவன் இன்று வரை இருந்ததில்லை என்பது தகவல்.1859 கொச்சுண்ணி போலீசாரால் கைது செய்யப்பட்டு பூஜப்புரா ஜெயிலில் அடைக்கப்பட்டு அங்கேயே இயற்கை எய்தியுள்ளார்.