ஒரே நாளில் மோத தயாராகும் அஜித், விஜய், சூர்யா - குஷியில் ரசிகர்கள்.!

ஒரே நாளில் மோத தயாராகும் அஜித், விஜய், சூர்யா - குஷியில் ரசிகர்கள்.!

November 23, 2017


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் அஜித், விஜய் மற்றும் சூர்யா. இவர்கள் மூவருமே வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுப்பவர்கள்.


ajithஇவர்கள் மூவரும் தற்போது அடுத்த படங்களுக்கு தயாராகி விட்டனர், அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாக உள்ள விசுவாசம் படம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 மற்றும் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா 36 ஆகிய படங்கள் உருவாக உள்ளன.


இந்த மூன்று படங்களுமே தீபாவளியை டார்கெட்டாக வைத்துள்ளன, இதனால் இவர்களது ரசிகர்கள் தற்போதே கொண்டாட தயாராகி விட்டனர். மேலும் மூன்று படங்களும் ஒரே நாளில் வெளிவர உள்ளதால் தியேட்டர்கள் கிடைக்குமா? அல்லது இது சாத்தியமாகுமா? என விவாதிக்க தொடங்கி விட்டனர்.


மேலும் இறுதியில் என்ன நடக்க போகிறது? யார் யாருக்கு வழி விட போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.