வா தல, வா தல இணையத்தில் வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்.!

April 26, 2018


தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரான தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தை நான்காவது முறையாக சிறுத்தை சிவா இயக்க உள்ளார்.


thala
இந்த படத்தில் தல அஜித் இளமையான தோற்றத்தில் கருகரு முடியுடன் நடிக்க இருப்பதாக தகவல்களும் ஒரு சில புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி இருந்தன.


thala

வரும் மே 4-ம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் தற்போது தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவரது ரசிகர்களோ வா தல வா தல என கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.