படப்பிடிப்பில் யாருக்கும் தெரியாமல் அஜித் செய்த வேலை - அதிர்ச்சியடைந்த படக்குழு.!

July 17, 2017


அஜித் சிவா கூட்டணியில் உருவாகி வரும் விவேகம் ரிலீஸ்க்கான இறுதி கட்ட பணிகளில் பிஸியாக உள்ளது. விவேகம் படத்தை பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார் ஒளிப்பதிவாளர் வெற்றி.


vivegam
இவர் கூறியதாவது படத்திற்கான கடினமாக உழைத்துள்ளோம், படம் ஹாலிவுட் தரத்தில் அமைய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து சிறப்பாக எடுத்துள்ளோம். டீஸருக்கு கிடைத்த வரவேற்பை வைத்தே கடுமையான உழைப்பு வீண் போகவில்லை என புரிந்து கொண்டோம் என்று கூறினார்.


மேலும் அஜித் சார் எதையும் மனதில் வைத்து கொள்ள மாட்டார், தனக்கான காட்சிகள் படமாக்கப்பட்டவுடன் கேரவனில் சென்று உட்காருபவர் இல்லை, எதை அழகாக செய்தாலும் உடனே பாராட்டி விடுவார், அவரது பாராட்டே எங்களுக்கு பெரிய ஊக்கமாக அமைந்தது.


அஜித் சார் படப்பிடிப்பின் போது யாருக்கும் தெரியாமல் மற்றவர்களை அழகாக போட்டோ எடுத்து விடுவார், வீரம் வேதாளம் போன்ற படங்களிலும் அப்படிதான் செய்தார், ஆனால் என்னை ஒரு போட்டோ கூட எடுக்கவில்லை என்ற வருத்தம் எனக்குள் இருந்தது.

ஆனால் விவேகம் படத்தில் என்னையும் எனக்கே தெரியாமல் போட்டோ எடுத்து அனுப்பி வைத்தார் அது எங்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது என பூரிப்புடன் கூறியிருந்தார்.
Latest