ஹெலிகாப்டருடன் அஜித் நிற்கும் விவேகம் புதிய புகைப்படம் உள்ளே!

April 21, 2017


வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் - சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம்.

இப்படத்தில்முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.


ajith
இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு அண்மையில் பல்கேரியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை சென்டிமென்ட்டாக இப்படத்தின் புதிய புகைப்படம் நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் போஸ்டருக்கு பதிலாக ஹெலிகாப்டருடன் அஜித் நிற்பது போன்ற புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளது.