தொடரும் சர்ச்சை.. அல்வா கொடுத்த ஐஸ்வர்யா - மனம் திறக்கும் அபிஷேக் பச்சன்.!

April 26, 2018


தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராய். தற்போது பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார்.


aiswarya rai
அபிதாப் பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து 11 வருடங்கள் ஆகின்றன. தற்போது இவர்கள் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் ஒரே வீட்டிலேயே தனி தனியாக வாழ்ந்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.


aiswarya rai

இந்நிலையில் தற்போது அபிஷேக் பச்சன் அளித்த பேட்டியில் நான் ஐஸ்வர்யாவின் அழகை பார்த்து திருமணம் செய்து கொள்ளவில்லை. எங்களுடைய உறவும் அப்படியில்லை.


எனக்கும் மேக்கப் இல்லாத ஐஸ்வர்யாவை தான் பிடிக்கும். திருமணம் முடிந்ததும் கணவருக்கு மனைவி இனிப்பு செய்து கொடுப்பது சம்பிரதாயம். ஐஸ்வர்யா எனக்கு அல்வா செய்து கொடுத்தார். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை, நாங்கள் மகிழ்ச்சியாக தான் இருக்கிறோம் என கூறியுள்ளார்.