பாகுபலியை தொடர்ந்து மீண்டும் ஓர் சரித்திர படம் - நடிக்கறது யாரு தெரியுமா?

பாகுபலியை தொடர்ந்து மீண்டும் ஓர் சரித்திர படம் - நடிக்கறது யாரு தெரியுமா?

June 19, 2017


ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி வரலாற்று சிறப்பு மிக்க சாதனை படமாக வெற்றியடைந்தது. இந்த படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடித்திருந்தனர்.


bagubaliRana in next Historical story


இந்த படம் ரூ 1708 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்த ராணா இந்த படத்திற்கு பிறகு தெலுகுவில் நேனே ராஜா நேனே மந்திரி படத்தில் நடித்து வருகிறார்.


இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு வரலாற்று படத்தில் நடிக்க உள்ளாராம் ராணா.


இந்து புராணத்தில் இடம் பெறும் பக்த பிரகலாதன் கதையை இயக்க உள்ளாராம் தெலுங்கு முன்னணி இயக்குனரான குணசேகரன்.

இதில் பிரகலாதனின் தந்தையான இரணியகசிபு கதாபாத்திரத்தில் நடிக்க ராணாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. ராணா ஏற்கனவே குணசேகரன் இயக்கத்தில் ருத்ரமா தேவி எனும் வரலாற்று படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Latest