அடேங்கப்பா அந்த தியேட்டர்லயே அதுக்குள்ள மெர்சல் ஹவுஸ் புல்லா? - செம மாஸ்.!

October 12, 2017


தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ள மெர்சல் படத்திற்காக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் வைட்டிங்கில் உள்ளனர். இந்த படம் வெளிவருவதற்கு முன்னரே பல சாதனைகளை படைத்து வருகிறது.


thalapathy
ஐரோப்பிய நாட்டின் மிகப்பெரிய திரையரங்கமான தி காரண்ட் ரெக்ஸில் கபாலி, பாகுபலிக்கு பிறகு வெளியாகும் தமிழ் படம் மெர்சல் தான் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.


அந்த பிரம்மாண்ட தியேட்டரில் மெர்சலுக்காக வரும் 18, 19 தேதிகளில் சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்குமான டிக்கெட்கள் மளமளவென விற்று தீர்ந்து விட்டதால் மேலும் ஒரு சிறப்பு காட்சியாக வரும் 17-ம் தேதி இரவு ஒரு காட்சி ஒளிபரப்ப முடிவு செய்துள்ளார்கள்.


அதற்கான டிக்கெட்களும் சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விட்டதாம். அப்படியிருந்தும் இன்னும் பல ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.