சூர்யாவை கிண்டல் செய்த தொகுப்பாளிகளை கண்டித்து நடிகர் சங்கம் அறிக்கை.!

January 20, 2018


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருபவர் சூர்யா, இவர் தற்போது செல்வராகவன் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அடுத்து கே.வி ஆனந்த் இயக்க உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக அவரே கூறியிருந்தார்.


suriya
மேலும் இந்த படத்தில் சூர்யாவிற்கு அப்பாவாக நடிக்க அமிதாப் பச்சனுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.


இதனை வைத்து பிரபல தொலைகாட்சியை சேர்ந்த இரண்டு தொகுப்பாளிகள் சூரியாவின் உயரத்தை கிண்டலடித்து பேசியிருந்தனர். இதனால் திரையுலக பிரபலங்கள் பலரும் இவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.


இந்நிலையில் தற்போது இது குறித்து நடிகர் சங்கமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த இரண்டு தொகுபாளிகளையும் கண்டித்துள்ளது.
Latest