முதல் கட்ட படப்பிடிப்பிலேயே 3 முறை, படக்குழுவினரை திணற வைத்த தல - என்னாச்சு?

June 13, 2018


தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.


viswasam
விஸ்வாசம் படத்தின் மூலம் டி.இம்மான் முதல் முறையாக அஜித்துடன் இணைந்து அவரது படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஹைதராபாத்தில் தொடங்கிய இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நடந்து முடிந்துள்ளது.


இந்நிலையில் தற்போது முதற்கட்ட படப்பிடிப்பில் நடந்த சம்பவங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. தல அஜித் முதல் கட்ட படப்பிடிப்பில் மட்டுமே மூன்று முறை படக்குழுவினருக்கு பிரியாணி சமைத்து போட சொல்லி உத்தரவிட்டாராம்.

ஆனால் இந்த முறை அஜித்திற்கு உடல்நிலை சரியில்லாததால் அவரால் சமைக்க முடியவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


viswasam