வெறும் 100 நிமிடத்தில் உருவாகியுள்ள 2.O , படம் முழுக்க இப்படி தான் இருக்குமாம்.!

September 14, 2018


ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 2 பாயிண்ட் O. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீஸர் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தது.


2 point o
வெறும் ஒரே நாளில் படத்தின் டீஸர் 24 மில்லியன் ஹிட்ஸ் அடித்துள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தை பற்றிய முக்கிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதாவது இந்த படத்தின் ரன்னிங் டைம் வெறும் 100 நிமிடம் மட்டும் தான் என கூறப்படுகிறது.


மேலும் இப்படத்தில் பெரியதாக காதலும் இல்லை காமெடியும் இல்லையாம். உலகில் தொழில்நுட்பம் வளர வளர ஒரு புறம் நன்மைகள் இருந்தாலும் மற்றொரு புறம் உலகம் பேரழிவையும் சந்தித்து வருவது மறுக்க முடியாத உண்மை. இதை தான் 2.O பத்ம பிரதிபலிக்க உள்ளதாம்.


2 point o

அதிகரித்து வரும் செல்போன் கதிர் வீச்சுகளால் ஒரு குறிப்பிட்ட பறவை இனம் முற்றிலுமாக அழிந்து வருகிறது. அழிந்து வரும் இந்த பறவைகளின் சக்திகள் ஒன்றாக சேர்ந்து மிக பெரிய பறவையாக மாறி இவ்வுலகையே கட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது. இந்த பறவை தான் வில்லனாக நடித்துள்ள அக்ஷய் குமார்.

இந்த பறவையிடம் இருந்து உலகத்தை காப்பாற்ற சிட்டி என்ற ரோபோ ரஜினியால் வடிமைக்கப்பட்டு களமிறக்கப்படுகிறது. இந்த பறவைக்கும் ரோபோக்கும் இடையே நடக்கும் யுத்தத்தை மிகவும் தத்ரூபமாக விறுவிறுப்பாக திரைக்கதையும் உருவாக்கியுள்ளார் ஷங்கர்.